திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (21:08 IST)

பிரபல் நடிகை விபத்தில் படுகாயம்! அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரபல நடிகை மஞ்சுவாரியர் தற்போது 'ஜாக் அண்ட் ஜில்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் படக்குழுவினர்களின் எச்சரிக்கையையும் மீறி டூப் இன்றி மஞ்சுவாரியர் நடித்தார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தால் அவர் படுகாயம் அடைந்ததால் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் குணமாகிவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 'ஜாக் அண்ட் ஜி' படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை மஞ்சுவாரியர் பிரபல நடிகர் திலீப்பின் முன்னாள் நடிகை என்பதும் இருவரும் கருத்துவேறு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.