செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (10:04 IST)

மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆகிழ்த்தியுள்ளது.
 
தேசிய நெடுஞ்சாலை எண் 26-ல் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் இருந்து மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
 
இந்த கார் சாகர் மாவட்டத்தை நெருங்கியபோது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த ட்ரக் மீது நேருக்கு நேர் மோதியது.
 
இந்த விபத்தில் சொகுசு காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பெரும் பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.