ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:10 IST)

நடிகை ’குஷ்பூ’ குழு என்னை ஏமாற்றிவிட்டனர்...சீரியல் நடிகை புலம்பல்...

குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக் குழுவினர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நந்திதா ஜெனிபர் புகார் கூறியுள்ளார்.
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ரிதம், முத்தம் உள்ளிட்ட  படங்களில் நாயகியாகவும் துணைநடிகையாகவும் நடித்தவர் ஜெனிபர். சமீபத்தில் குஷ்பு நடித்து வருகிற லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த நாடகத்திலிருந்து நீக்கப்பட்டார். ஜெனிபருக்கு பதிலாக வேறொரு நடிகை நாடகத்தில் நடித்து வருகிறார்.
 
இதுகுறித்து ஜெனிபர்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:
 
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் குஷ்பு மேடத்துக்கு அடுத்தநிலையில் நாயகி வேடம் எனக்கு என்றுதான் கூறினார்கள். அதனால் அந்த நாடகத்தில் ஒப்புக்கொண்டேன் ஆனால் 3 மாதங்கள் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது எனக்கு பதிலாக இன்னொரு நடிகை நடிக்கிறார் என்று.
 
அதன் பின்னர் இயக்குநரிடம் முறையிட்டேன். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லை.சீனியர் நடிகையான குஷ்பு மேடத்துகு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை.எனவே இந்த சம்பவத்தை நினைத்து மனமுடைந்து போய் நாடகத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.