வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:18 IST)

முட்டிப்போட்டு பிரியா ஆனந்தை ப்ரோபோஸ் செய்த நாஞ்சில் சம்பத்! என்னடா நடக்குது இங்க?

ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி நாளை  ரிலீஸாக உள்ளது. கலகலப்பான அரசியல் பேசும் இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. 
 

 
அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப் படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கிவருகின்றன. இப்படத்தில் அரசியல் பிரமுகரும் அதிரடிப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக நடித்து சினிமாவில் அறிமுகமாகிறார். 
 
தற்போது நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்காக படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில்  சமீபத்தில் பிரபல யுடியூப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் இப்படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர் அப்போது நாஞ்சில் சம்பத் நடிகை பிரியா ஆனந்திற்கு முட்டிபோட்டு ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் செய்துள்ளார்.