செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (10:20 IST)

நடிகை வேதிகா பிறந்த தினம் இன்று

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா 1988ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிறந்தார். 



இவர் கன்னடத்தை  தாய் மொழியாக கொண்டவர் ஆவார். மதராசி படம் மூலம் அர்ஜுனுக்கு ஜோடியாக 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு மலைமலை படத்தில் நடித்தார். இடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு பரதேசி படத்தில் நடித்தார். இந்த படம் வேதிகாவுக்கு பெரும் புகழ் பெற்று தந்தது.  இதை தொடர்ந்து கன்னடத்தில் சிவலிங்கா, மலையாளத்தில் கசின் ஆகிய படங்கள் மூலம் பிரபலம் ஆனார். கடைசியாக தமிழில் காஞ்சனா 3, வினோதன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாடி என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் . வேதிகாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.