திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:05 IST)

என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர்!! மலையாள நடிகை பகீர் புகார்!!!

என்னை படுக்கைக்கு வரச்சொல்லி என் அம்மாவிடம் பல தயாரிப்பாளர்களும், சினிமா பிரபலங்களும் கூறியதாக மலையாள நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ மூலம் பல நடிகைகள் சினிமா துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர்.
 
இந்நிலையில் மலையாள நடிகை கனி குஷ்ருதி பேசுகையில், நான் பல மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் பாலியல் தொல்லை. நடிக்க வாய்ப்பு தந்தால், படுக்கையை பகிர வேண்டும் என தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் வற்புறுத்தினர். அப்படி வளைந்துகொடுத்து தான் போக வேண்டும் என்றால் அப்படிபட்ட வாய்ப்பே தேவையில்லை என உதறினேன்.
 
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர் என அவர் ஆதங்கத்துடன் கூறினார்.