செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (08:48 IST)

வித்தியாசமான ட்ரஸ்ஸில் ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் சமூகவலைதளத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் மும்பை வெயிலுக்கு இதமாக எப்படி மதுபானத்தை தயார் செய்து குடிப்பது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராக இருக்கும், ஹூமா குரேஷிக்கு தற்போது 36 வயது ஆகிறது. இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் பற்றி பேசியுள்ள அவர் “நான் எனக்கான நபருக்காக காத்திருக்கிறேன். திருமணம் செய்துகொள்ள ஒன்றும் அவசரம் இல்லை.  திருமணம் சம்மந்தமாக அழுத்தத்தைப் போட்டுக்கொள்வதில்லை.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)