புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (17:49 IST)

விடாமுயற்சி கெட்டப்பில் அஜித்... வைரலாகும் New Look!

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா
நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார் . 

விடாமுயற்சி படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்!.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Ajith New Getup In Vidamuyarchi
 
இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அஜித்தின் ராசியான எழுத்தான " V" லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது  விடாமுயற்சி படத்தின் லுக்கில் மிரட்டலாக இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.