வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 13 மே 2023 (14:31 IST)

அரசியலுக்கு வரும் ரஜினி பட வில்லன் நடிகர்

suman
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் சுமன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் சுமன்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி என்ற படத்தில் வில்லனாக நடித்து  பாராட்டைப் பெற்றார்.

அதன் பின்னர், விஜய்யின் குருவி, அஜித்தின் ஏகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அர்சியஒய்ல் கவனம் செலுத்திய சுமன் கடந்த 1999 ஆம் ஆண்டுதெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

2004 ஆ ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் சுமன் அறிவித்துள்ளார்.

அவர், பாஜக அல்லது தெலுங்குதேசம் கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.