புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (11:37 IST)

பிகினி உடையில் மலையேறிய அமலா பால் - அட்ராசிட்டி தாங்க முடியல தாயி!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 


 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற இவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆடை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவிற்கு ஓடியது. 


 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்டீவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி புகைப்படங்ககளை பதிவிட்டு தன்னை அப்டேட்டாக வைத்திருப்பார். அந்தவகையில் தற்போது பிகினி உடையில் மலை மீது ஏறி அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் பிகினி உடையில் யாராவது இப்படி ட்ரெக்கிங் செல்வார்களா? உங்கள் அட்ராசிட்டிக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.