யார் இந்த நங்கேலி? ஆடை சொல்லும் கசப்பான கதை!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (11:11 IST)
சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 
 
ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த படம் ஆடை. அமலாபால் நிர்வாணமாக காட்டப்பட்டாலும் அதில் துளியும் ஆபாசம் இல்லை என்பதே பலரின் பொதுவான கருத்தாக இருந்தது. 
 
மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற பெண் நடத்திய போராட்டம் பற்றிய கார்ட்டூன் கதையுடன் ஆரம்பமானது ஆடை படத்தின் கதை. 
இந்த நங்கெலியின் கதை குறித்த வீடியோவை ஆடை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கதை பார்ப்பவர்கல் மத்த்யில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 
 
ஆனால், நங்கெலியின் கதைக்கும் ஆடை படத்திற்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லை என பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். நங்கெலி குறித்த வீடியோ உங்கள் பார்வைக்கு... 


இதில் மேலும் படிக்கவும் :