ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (18:40 IST)

பல கோடி கொடுத்து வாங்கிய காரை விற்ற அமலா பால் - அவரது வாழ்வில் இவ்வளவு கஷ்டமா?

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவரான அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்து அடுத்தடுத்து பல வெற்றி பங்களில் நடித்து  முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம் வருகிறார். 


 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
அதனையடுத்து சமீபத்தில் தான் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏ.எல் விஜய்,  ஐஸ்வர்யா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார்.  அவருக்கு வாழ்த்து தெரிவித்த அமலா பால் விஜய் நல்ல மனிதர் அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும் என்று கூறி வாழ்த்தினார் 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்வென்றால், தனது காதல் கணவருடன் விவாகரத்து ஆன போது அமலா பல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் நெருங்கிய நண்பர்கள் கூட அவரை விட்டு பிறந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமலா பால் அமைதியை தேடி இமயமலைக்கு சென்றுள்ளார். 
 
மேலும் தான் வைத்திருந்த மெர்சிடிஸ் கார் தன்னுடைய  ஈகோவை ஊட்டி வளர்கிறது என்பதால் அந்த காரை திடீரென விற்றுவிட்டாராம்.   அதுமட்டுமின்றி தற்போது பாண்டிச்சேரியில் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறாராம் அமலா பால்.  வெளியில் செல்ல வேண்டும் என்றால் சைக்கில், மாதம் 20 ஆயிரம் ருபாய் மட்டுமே செலவுக்கு என மிகவும் எளிமையான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாராம்.