நடிகர் விஜய்யின் செல்ஃபி....இந்திய அளவில் புதிய சாதனை...ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் எடுத்த புகைப்படம் டுவிட்டரில் இந்திய அளவில் சாதனைப் படைத்துள்ளது.
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர்.
இப்படத்தில் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தமிழகத்தில் சென்னை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
நெய்வேலி படப்பிடிப்பின்போது, வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தினர். அப்போது அவரை அழைத்துச் என்றனர். வருமான வரிச் சோதனை முடிந்தபின் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அங்கு ஏராளமான ரசிகர்கள் ரசிகர்கள் விஜய்யைப் பார்க்கக் குவிந்தனர். அப்போது விஜய் ஒரு பேருந்தின் மீது ஏறி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது வைரலானது.
இது விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்திய அளவில் அதிகம்பேர் ரீடுவீட் செய்த டுவிட் என்ற சாதனையை இது சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.