திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (18:51 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பிகில்’ நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் என்று கூறப்பட்டது. இந்த தகவலை அவரும் உறுதி செய்யாமல் சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தார். எனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கருதப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்குமேல் வதந்திகளை நான் பெரிதாக்க விரும்பவில்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அமிர்தா ஐயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது 
 
ஏற்கனவே நடிகர் ரியோராஜ், பாலாஜி முருகதாஸ், தீனா, ரக்சன், சஞ்சனா, புகழ், உள்பட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது