செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (12:35 IST)

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் இதுதான்

நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார்.
வரும் ஜூன் 22-ந் தேது நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வர உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அன்றைய தினம், விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் டிராபிக் ராமசாமி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில் விஜய் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என முடிவு செய்துள்ளாராம். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் பலரது நெஞ்சைக் கரைக்கும் விதமாக உள்ளது.
 
தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பலர் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நான் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என விஜய் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.