‘தளபதி 62’ படத்தில் விஜய்யை ஆடவைத்திருப்பது யார் தெரியுமா?
‘தளபதி 62’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் விஜய். ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் ஸ்ரீதர். இவர் ஏற்கெனவே ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘புலி’, ‘தெறி’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணியாற்றியிருக்கிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருடனும் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘விஜய் 62 பாடல் முடிந்தது’ எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோகுலம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.