திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (14:56 IST)

அமெரிக்காவுக்கு பறக்கும் விஜய் 62 படக்குழுவினர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கவுள்ளது.
 
விஜய் 62 படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
 
இப்படம் அரசியல் சார்ந்த கதைக்களம் உள்ள திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க விஜய் 62 படக்குழு அமெரிக்கா செல்கிறது. மேலும், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.