1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (10:31 IST)

டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு

டிராபிக் ராமசாமி திரைப்படத்தை, விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, டிராபிக் ராமசாமி என்றொரு படம் தயாராகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த விக்கி இயக்க, ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படத்தின் இயக்குனர் விக்கி, விஜய்யின் தீவிர ரசிகன் என்பதாலேயே எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன் என கூறியுள்ளார்.
 
மேலும் இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனும் நடிகருமான விஜய் பிறந்தநாளன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.