நடிகர் விஜய்க்கு நன்றி !...மாஸ்டர் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி – அமைச்சர் கடம்பூர் ராஜூ
மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடும் விஜய் மற்றும் அப்படத்தில் தயாரிப்பாளர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் பொது ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
தற்போது சில தளர்வுகளுடன் ஷூட்டிங் நடத்தவும், திரையரங்குகளில் படங்கள் திரையிட அனுமதியளிக்கப்பட்டாலும் அதில் 50% அளவு ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே இதுகுறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளதாவது :
மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடும் விஜய் மற்றும் படத் தயாரிப்பாளருக்கு நன்றி… ஓடிடியில் படம் வெளியிடுவது நல்லது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அனுமதி அளிக்கத்தயார் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.