திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (20:55 IST)

''கிங் ஆஃப் கோலிவுட்''….விஜய் 28 ஆண்டுகள் ! இணையதளத்தில் வைரல் #28YearsOfBelovedVIJAY

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது ரசிகர்கள் இவரைத் தமிழ் சினிமாவில் ராஜா என்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர்  வெங்கட் பிரபு விஜய்யின்  28 ஆண்டுகளை முன்னிடு ஒரு காமன் டிபியை வெளியிட்டுள்ளார்.

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், வரும் டிம்சம் 4 ஆம் தேதியுடன் நடிக்க வந்து 28 ஆண்டுகள் ஆகப்போகிறது.

இந்நிலையில் இதைக்கொண்டாடும் விதமாக #28YearsOfVIJAYISM என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர்  வெங்கட் பிரபு  தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யின்  28 ஆண்டுகளை முன்னிடு ஒரு காமல் டிபியை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் பாடலாசிரியர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய்யின் 28 ஆண்டுகளை சிறப்பிக்கும் வகையில் ஒரு டிபியை வெளியிட்டுள்ளார்.

மேலும் மாஸ்டர் என்று ஹேஸ்டேக் பதிவிட்டும் இந்திய அளவில் விஜய்யின் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

வரும் 2021-ல் ஜனவரியில் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.