செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (12:26 IST)

மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதியா? அமைச்சர் கடம்பூர் ராஜூ

தளபதி விஜய் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸாகும் தினத்தில் சிறப்பு காட்சிகளாக அதிகாலை காட்சி வெளியாகும் என்பது தெரிந்ததே. ஒரு சில படங்கள் நள்ளிரவு காட்சிகள் கூட வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் காலத்தில் மாஸ்டர்  படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் அளிக்க தயாராக இருப்பதாக செய்தி அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது 
 
பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது