செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: நடிகர் சூரி பேட்டி

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என காமெடி நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை செய்ய நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் நடிகர் சூரி ஆஜரானார்.
 
அவரிடம் இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சூரி நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பியுள்ளேன் என்றும் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்