வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (19:28 IST)

பிரமாண்ட பட நடிகருக்கு போலீஸார் அபராதம்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர்  விதி மீறலில் ஈடுபட்டதற்காக  போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் வரும்  25 ஆம் தேதி( நாளை)  ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் போலீஸார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ஒரு கார் வந்தது. அதைச் சோதித்தபோது, அதில், கருப்பு பிலும் ஒட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே ஐதராபாத்தில் கருப்பு பிலி ஒட்ட பஸார் தடை விதித்துள்ள நிலையில், விதி மீறி அக்காரில் ஓட்டப்பட்டிருந்ததால், விசாரணை செய்தனர். அந்தக் கார் நடிகர் ஜூனியர் என்.டி,ஆருக்கு சொந்தமானது எனத் தெரிந்தது.

இந்தக் காரில் ஜூனியர் என்.டி.ஆரின் மகன் இருந்ததாகத் தெரிகிறது. எபவே விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டதுடன் காரில் கருப்பு பிலியை கிழித்தனர்.