புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (15:02 IST)

தென்னிந்திய சினிமாவை கேலி செய்த தொகுப்பாளர்: பதிலடி கொடுத்த பாகுபலி நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் ராணா, சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில், தென்னிந்திய சினிவாவை கேலி செய்த தொகுப்பாளருக்கு பதிலடி கொடுத்தார்.

ராணா டக்குபடி, தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவர் வில்லனாக நடித்த பாகுபலி திரைப்படமே இந்திய சினிமா ரசிகர்களுக்கு அவரை அடையாளப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராணா, ஒரு யூட்யூப் சேன்னலுக்கு தன்னுடைய பேட்டியை அளித்தார். அப்போது அந்த பேட்டியின் தொகுப்பாளர், தென்னிந்திய சினிமாவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், தான் ரோஜா மற்றும் பாகுபலி அகிய திரைப்படங்களை மட்டுமே தான் பார்த்துள்ளதாகவும் கூறினார்.

உடனே நடிகர் ராணா, தொகுப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சினிமாவிற்குள் பிரிவு எதுவும் இல்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் தற்போது அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள் தற்போது இந்தியாவில் பெரிய வசூலை அள்ளுகிறது என்றும், தென்னிந்திய சினிமா என்று தனியே பிரிப்பது நியாயமில்லை எனவும் தெரிவித்துள்ளர்.

நடிகர் ராணாவின் இந்த பதிலடியால் தொகுப்பாளர் அதிர்ந்து போனார். ராணா பதிலடி குடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.