அரசியலில் படுதோல்வி : சினிமாவுக்கு திரும்பும் பிரபல நடிகர் ?

pavan kalyan
Last Updated: புதன், 29 மே 2019 (19:01 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். சூப்பர் ஹிட் படங்களைக்கொடுத்த நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் பவன் கல்யாண். இதுவரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அத்துணை படங்களுமே சூப்பட் ஹிட் தான். அந்தளவுக்கு இவருக்கு ஆந்திராவில்   ரசிகர்கள் அதிகம்.
அதே ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிட்டார்.அதில் இரு தொகுதிகளில் துணிந்து போட்டியிட்ட அவர் படுதோல்வி அடைந்தார்.
 
ஏற்கனவே இவரது அண்ணனும் சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரஜா ராஜ்ய கட்சி என்று அரசியல் குதித்தார். அதன் பின்னர் அதற்கு மக்கள் போதுமான ஆதரவு நல்காததால் காங்கிரஸில் ஐக்கியமானார். தற்போது அவர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
 
அதைப்போலவே பவன் கல்யாணும் அரசியலில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மீண்டு அவர் தனது ரசிகர்கலை குஷிபடுத்த சினிமா கோதாவில் குதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.
 
இந்நிலையில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற கப்பர் கிங் என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் இது வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :