1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:49 IST)

நடிகர் நகுல் மனைவிக்கு வந்த ஆபாச வீடியோ: போலீசில் புகார்

nakul
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான நகுலின் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்கள் வந்ததை அடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது
 
பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் காதலில் விழுந்தேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் 
 
இந்த நிலையில் நகுலின் மனைவியை ஸ்ருதிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மர்ம நபர்கள் அனுப்பி வருவதாக தெரிகிறது 
 
இதனை ஏற்கனவே ஸ்ருதி கண்டித்தும் தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்