துணிவு படம் எப்படி இருக்கு… நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட அஜித்!
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது. இந்த இரு பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது நெருங்கிய நட்பு வடத்தினரிடம் அஜித் “படம் நன்றாக வந்திருக்கிறது எனவும் ஓடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும்” கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.