1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:18 IST)

அஜித் ஒரு தீர்க்கதரிசி: இயக்குனர் எச் வினோத்

H Vinodh
அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறுங்கள் என இயக்குனர் எச் வினோத் இடம் கேள்வி கேட்டபோது அவர் ஒரு தீர்க்கதரிசி என்று கூறியுள்ளார். 
 
அஜீத் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு  திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் நேற்று வினோத்திடம் அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு தீர்க்கதரிசி என்று கூறியுள்ளார்ல் மேலும் ஒருவர் தவறு செய்தால் அந்த தவறை மட்டும் சுட்டிக்காட்டுங்கள் என்றும் ஒட்டுமொத்த சினிமா தொழிலையே குற்றம் சொல்லாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அஜீத்துக்கு தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி பேசுவது பிடிக்காது என்றும் அவரைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி முக்கியமில்லை என்றும் படக்குழுவினர் நேர்மையான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்
 
வெற்றி வரும் போகும் ஆனால் மனிதர்களை இழிவாக பேசக்கூடாது என்பதே அஜித்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva