1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (08:59 IST)

அஜித்தின் துணிவு பட தெலுங்கு டைட்டில் இதுதான்… வெளியான தகவல்!

துணிவு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டே உள்ள நிலையில் இப்போது ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற  அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது. இந்த இரு பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தெலுங்கில் வெளியாகும் துணிவு படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் தலைப்பு தெகிம்பு (Tegimpu) என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் தெகிம்பு என்ற வார்த்தைக்கு தைரியம் என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.