ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை: கௌதமி

VM| Last Modified ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (13:01 IST)
பாலியல் வன்கொடுமையால் ஆண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். 
 
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் யோகா ஆலய அமைப்பு சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது. இது சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாசனப் பயிற்சியின் மூலம் நம்முடைய உலகினை மாற்றலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இதனை உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு புற்றுநோயால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் நமது உடல் நிலை மாறும். அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு யோகாசன பயிற்சி வரப்பிரசாதமாக உள்ளது. 
 
பாலியல் வன்கொடுமையால் பெண் குழந்தைகளைப் போன்று ஆண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாலியல் வன்கொடுமைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :