வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (19:59 IST)

காப்பகத்தில் பாலியல் கொடுமை: 3 சிறுவர்கள் பலி

மத்திய பிரதேசத்தில் இயங்கும் ஒரு காப்பகத்தில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் 3 சிறுவர்கல் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரசு நிதி பெற்று காப்பகம் ஒன்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் காப்பகங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் குறிப்பிட்ட காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. 
 
மேலும் 3 சிறுவர்கள் பலியாகியுள்ள அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த காப்பகத்தில் உள்ள சக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். 
 
முதற்கட்ட நடவடிக்கையாக அந்த காப்பகத்தின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த காப்பத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு தக்க பாதுகாப்பையும் வழங்கியுள்ளனர்.