ஆரி வெளியிட்ட நெஞ்சுக்கு நீதி அப்டேட்!
நடிகர் ஆரி நெஞ்சுக்கு நீதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன. உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம்.
இந்த படத்தில் நடிகர் ஆரி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் பேசும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.