1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (10:06 IST)

உதயநிதி ஸ்டாலின் மேல் கனிமொழி அப்செட்… பின்னணி என்ன?

திமுகவின் அடுத்த தலைமுறை முகமாக உதயநிதி ஸ்டாலினை நிறுத்தும் வேலைகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.

கட்சியில் தலைமைக்கு வர ஸ்டாலினுக்கு எடுத்துக்கொண்ட ஆண்டுகள் போல உதயநிதி ஸ்டாலினுக்கு நீண்ட ஆண்டுகள் தேவைப்படாது. ஏனென்றால் கட்சியில் ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரமிக்க முகமாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார். இந்நிலையில் கட்சியின் மகளிரணி செயலாளரான கனிமொழி இப்போது உதயநிதியின் செயலால் அதிருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் திமுகவின் இளைஞரணியில் சேர்க்கப்பட்டனர். பெண்களை மகளிரணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.