திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (10:45 IST)

திருமணத்திற்கு பின் திருப்பதியில் வழிபாடு செய்த நட்சத்திர ஜோடி!

nikki
திருமணத்திற்கு பின் திருப்பதியில் வழிபாடு செய்த நட்சத்திர ஜோடி!
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்று ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி ஏழுமலையான் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தனர் 
 
இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்றும் தரிசனத்திற்குப் பின்னர் வெளியே வந்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது