செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 மே 2022 (15:41 IST)

இணையத்தில் வைரலாகும் ஆதி- நிக்கி கல்ராணி திருமண புகைப்படங்கள்!

நட்சத்திர ஜோடிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமணம் இன்று நடந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர்கள் இருவருக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் ஹல்தி சடங்கு நடந்தது. இந்நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.