வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (16:35 IST)

தரமான சம்பவம்! அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும்  "ஆடை"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாண்டு மீள்கிறார் என்பது தான் ‘ஆடை’ படத்தின் ஒன்லைன்.
 
முன்னதாக ஆடை படத்தின் டீசரை கரண் வெளியிடும் தகவலை ட்விட்டரில் அறிவித்திருந்த அமலா பால், ’பாலிவுட்டின் கிங்மேக்கர் ஆடை டீசரை வெளியிடுவது’ மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 
இந்த டீசர் ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று வருவதோடு அமலா பாலின் வித்யாசமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.