1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

ரொமான்டிக் போஸ் கொடுத்த அமலா பால்! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 
 

 
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வெற்றிகண்ட அவர்  அதனை தொடர்ந்து தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  
 
இயக்குனர் ஏ. எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்ற அமலாபால் தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வருவதோடு கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். 


 
அந்தவகையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி படுகர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைத்தளங்களில்  பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை பார்த்து செம்ம கலாய் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்.


 
அந்தவகையில் தற்போது மீண்டும்  நடிகை அமலா பால் நிலவின் ஒளியில் இரவில் ஆனந்த் குளியல் போடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை சூரியன் படத்தில் கௌண்டமணி நடித்திருக்கும் ஒரு காட்சியுடன் இணைத்து ரசிகர்கள் விடாமல் கிண்டலடித்து வருகின்றனர்.