ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (19:30 IST)

அமலா பாலின் "ஆடை" டீசர் அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். அண்மையில் இவரது நடிப்பில் ராச்சசன் படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து , ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் பஞ்சாபி பெண்ணாகவும் ஒரு  படத்தில் நடிக்கிறார். மேலும், அதோ அந்த பறவை போல என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காடுகளைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு வருகிறது. 


 
இந்நிலையில் "ஆடை" நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், ஆடை படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.