வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (09:39 IST)

காருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி!!!

கோவையில் இளம்பெண் ஒருவரின் முன்னிலையில் காரில் இருந்த நபர் சுய இன்பம் செய்தது பற்றி சின்மயி டிவிட்டரில் பேசியுள்ளார்.
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து பெண்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் சின்மையி தனது டிவிட்டர் பக்கத்தில், கோவையில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக காரியில் வந்த நபர் அந்த பெண்ணை பார்த்து சுய இன்பம் கண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து சற்று தூரம் சென்றுள்ளார், ஆனாலும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து அந்த நபர் இதே போல் செய்துள்ளார். அந்த நபரின் கார் நம்பரை அந்த பெண் தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் அது இந்த கார்தான் எனவும் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்தவர்கள் அவனுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென்று கூறி வருகின்றனர்.