செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (12:37 IST)

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது ஸ்டாலின் பகீர் புகார்

கோவை கொடீசியா வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவான பிரம்மாண்டமான பிரச்சார கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,
 

 
யாருடைய வீட்டிலோ பணத்தை எடுத்துவிட்டு, துரைமுருகன் வீட்டில் எடுத்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
 
திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி அதிமுக சூழ்ச்சிகளை செய்து வருகிறது. 
திராவிட முன்னேற்ற கழகம் மோடியை எதிர்க்க காரணம் அவர் ஒரு தத்துவத்தின் பிரதிநிதி.
 
நாம் அதற்கு நேர் எதிர் தத்துதுவத்தின் பிரதிநிதிகள். அரசியலில் நிரந்தரமான எதிரி என யாரும் இல்லை என்பார்கள்
 
ஆனால் நமக்கு அரசியலில் எதிரி நரேந்திர மோடி மட்டுமே.. அவருடைய கொள்கை நமக்கு எதிரி
 
கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு அரிய கண்டு பிடிப்பை கண்டுபிடித்து இருக்கின்றார்.
 
இந்தியாவில் மதகலவரம் நடக்கவே இல்லை என்கின்றார் அவர்.
 
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் மதகலவரம் தொடர்பாக  தாக்கல் செய்த அறிக்கையினை பட்டியலிட்டு பேசினார் ஸ்டாலின்.
 
தமிழகத்தில் மட்டும் கலவரத்தில் ஒரே ஓருவர் மட்டும் உயிரிழந்து இருக்கின்றார்.அதற்கு காரணம் இது பெரியார் மண். அதிக பாதிப்பு உ.பி மாநிலம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 
மேட்டுப்பாளையத்திற்கு பிரச்சாரத்திற்காக கோவை அறையில் இருந்து கிளம்பிய போது
2 பெண் போலீசார் புகைபடம் எடுக்க ஆசைபடுவதாக கூறினார்கள்.
 
அவர்களுடன் புகைபடம் எடுத்துக்கொண்டேன் .அப்போது எந்த ஊர் என கேட்டேன். வெட்கப்பட்டு திரும்பி கொண்டனர்.
 
பின்னர்  பொள்ளாச்சி என சொன னார்கள்.
 
 பெண் போலீசார் பொள்ளாச்சி என்ற ஊர் பெயரை சொல்லவே வெட்கப்படுகின்றனர்.
 
7 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கபட்டுள்ளனர்.
 
இதற்கு பின்னணியில்  பொள்ளாச்சி ஜெயராமன்,அவரது மகன்கள் இருக்கின்றனர்.
 
ஒரு பெண்ணை காரில் தூக்கி போட்டு  சென்ற போது காரில்  இருந்து குதித்து ஒரு பெண் இறந்துள்ளார். காரில இருந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்
 
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் புகார் கொடுத்து இருக்கின்றார்.சரியாக விசாரிக்க வில்லை
 
காவல் துறை புகாரை சரியாக விசாரித்து இருந்தால் ஒரு 50,60 பெண்களை காப்பாற்றி இருக்க முடியும்
 
எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்.ஜி்.ஆர் மாதிரி நினைத்து கொண்டு பிரச்சாரத்திற்கு போய் ஒவ்வொருவராக பார்த்து கும்பிடுகின்றார்.
 
என் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் 2001ல் குடும்பத்துடன் தற்கொலை கொண்டார். இப்போது அந்த விவகாரத்தை கையில் எடுப்பேன என எடப்பாடி  பழனிச்சாமி சொல்கின்றார்.
 
கடந்த 8 வருடமா என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?
 
இப்போது கூட வழக்கு போடுங்கள் . நான் சந்திக்க தயார். நான் பனங்காட்டு நரி. அவர்கள் மீதான குற்றசாட்டிகளை திசைதிரும்ப இது. போன்ற குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர்
 
இந்த தேர்தலில் மக்கள் நல்ல முடிவை கொடுக்க காத்திருக்கின்றார்கள்  இவ்வாறு கூறினார்.