புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 மே 2021 (17:14 IST)

40 வருடம் சினிமா பயணம்… ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து

சினிமாவில் 40 ஆண்டு காலம் பயணித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை மீனாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 1981 மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில்  சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற படத்தி நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

1990 ஆம் வருடம் புதிய கதை என்ற படத்தில் ஹீரோயினாக மீனா அறிமுகம் ஆனார். அதன் பின்னர், ராஜ்கிரண், ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், உள்ளிட்ட அத்தனை முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்தார்.அதேபோல் தெலுங்கும்,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும்  நடித்துப் புகழ் பெற்றார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமெக்கில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்காக வெற்றிகரமாகப் பயணித்து வரும் நடிகை மீனாவுக்கு உடன் நடித்துவரும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீன நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.