1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 27 மே 2021 (09:06 IST)

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி: சுவாரஸ்ய தகவல்!

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி: சுவாரஸ்ய தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீனாவிடம் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த், மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட போது திடீரென மீனாவிடம் வந்த ரஜினிகாந்த் ’ஐ அம் வெரி சாரி, ஐ அம் டிஸ் அப்பாயிண்ட் வித் யூ’ என படபடவென பேசினாராம். இதனால் ரஜினி தன்னிடம் வந்து சாரி கேட்பதை பார்த்ததும் பதறிப் போன மீனா, ‘என்னாச்சு சார்? என்று கேட்ட போது ’எல்லோரும் மாறிவிட்டார்கள்ம் ஆனால் நீங்க மட்டும் இன்னும் ’வீரா’வுல பார்த்த மாதிரியே இருக்கீங்க’ என்று கூறினார்
 
ரஜினி கூறியதை கேட்டு செட்டில் உள்ள அனைவருமே சிரிக்க தனக்கு ஒரே வெட்கமாகி விட்டது என்று ’அண்ணாத்த’ படப்பிடிப்பின் அனுபவம் குறித்து மீனா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 25 வருடம் கழித்து ரஜினி சார் அவர்களுடன் நடிப்பதாகவும் படப்பிடிப்பில் ரஜினி சார் தன்னுடன் ஜாலியாக பேசியதாகவும் அவர் இன்னும் மாறவே இல்லை என்றும் மீனா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது