திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 மே 2021 (23:43 IST)

விஜய் பட பாடல்…..100 மில்லியன் வியூஸ்…,

விஜய் பட பாடல் 100 மில்லியன் வியூவர்ஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான முதல் படம் தெறி. இப்படத்தில் விஜய் வித்தியாசமாக கெட்டப்பில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர். இப்படம் பெரும்வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய்யின் குழந்தையாக வரும் பெண்ணும், விஜய்யும் இணைந்து பாடுவது போன்ற #EenaMeenaTeekaHits100MViews என்ற பாடல் இன்று 100 மில்லியன் வியூவர்ஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே விஜய்யின் மெர்ஷல், பிகில், சர்கார், மாஸ்டர் படப் பாடல்கள் சாதனை படைத்துவரும் நிலையில் தெறி படத்தின் ஒவ்வொரு பாடல்களும் சப்தமில்லாமல் சாதனை படைத்துவருகிறது.

ஏற்கனவே என் ஜீவன் பாடல் 100 மில்லியன் வியூவர்களைக் கடந்த நிலையில் இன்று, #EenaMeenaTeekaHits100MViews என்ற பாடல் இன்று 100 மில்லியன் வியூவர்ஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.