வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 மே 2021 (18:57 IST)

ரஜினியின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான் ! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகிவரும்  படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அரசியல் தான் ஈடுபடப்போவதில்லை கட்சியும் ஆரம்பிக்கப் போவதில்லை என ரஜினி கூறியது ரசிகர்களுக்கு வருத்தம் இருந்தாலும் இந்தத் தேர்தலி அவர் போட்டியிடாதது நல்லது என்றே விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையி, ரஜினியின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் எப்போதும் ஃப்ட்னஸாக இருப்பதற்கான காரணாம் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினி, தினமும் தனது ஃபோயஸ் கார்டன் இல்லத்தின் நடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அவர் தவறாமல் கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் நடைப்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.