Daily Horoscope
✕

தளபதியா யாரு அது ? அஜித் பட நடிகையின் பதிலால் கடுப்பான ஆன விஜய் ரசிகர்கள்!

Updated: வியாழன், 25 ஏப்ரல் 2019 (19:14 IST)
தமிழ்  சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 


 
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் வேதா புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படத்தை குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரிடம் சில கேள்விகள் கேட்கபட்டது. அப்போது தலயா? தளபதியா ? என்று தொகுப்பாளர் கேட்க,  அதற்கு ஷ்ரத்தா தளபதியா.. ? மணிரத்னம் இயக்கிய தளபதி தானே என்று பதிலளித்தார். இதனை கேட்டு குபீர் சிரிப்பு சிரித்த ஆங்கரால் கடுப்பான ஷ்ரத்தா கடைசிவரை அந்த கேள்விக்கு பதில் தெரியாமல்  எஸ்கேப் ஆகிவிட்டார். 


 
இதனை கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கடுப்பில் "என்னதான் அஜித் படத்தில் நடித்தாலும் தளபதி என்றால் விஜய் என்று கூடவா தெரியாது என விமர்சித்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

நான் என் கணவரை பிரியவில்லை - ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

ஹரி இயக்கத்தில் அதர்வா?.. வெளியான அப்டேட்...

த்ரிஷாவுக்கு திருமணம் நடக்குமா? அனிருத் திருமணத்தை கணித்த டேரட் கார்டு ஜோதிடர் ஜெயஸ்ரீ கணிப்பு..

ரூ.250 கோடி வசூலை நெருங்கிய சீன்!.. 300 கோடி அடிக்குமா?...

ரூ.1300 கோடி வசூலை தாண்டிய ராமயணா! - 11 நாள் வசூல் அப்டேட்...

அடுத்த கட்டுரையில்
Show comments