மீண்டும் அஜித்-சிவா கூட்டணியில் படம்: சத்யஜோதி நிறுவனம் உறுதி
சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று 100வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்து அஜித், நயன்தாரா, சிவா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் சத்யஜோதி நிறுவனம் நன்றி கூறியுள்ளது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யஜோதி நிறுவனத்தின் தலைவர் தியாகராஜன், 'விஸ்வாசம்' படம் வெற்றி அடையும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு மாபெரும் வெற்றி அடையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கு ஆன்லைன் மூலம் புரமோஷன் செய்த அஜித் ரசிகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
மீண்டும் அஜித்-சிவா கூட்டணியில் இன்னொரு படத்தை தயாரிக்க முயற்சி செய்வோம். எங்கள் முயற்சி விரைவில் பலிக்கும் என எதிர்பார்க்கின்றேன்' என்று கூறியுள்ளார். போனிகபூருக்கு இரண்டு படங்கள் தொடர்ச்சியாக நடிக்கும் அஜித், மீண்டும் சத்யஜோதிக்காக ஒரு படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்