1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
  6. டெஸ்ட் இடம்: வாட்சன் திண்டாட்டம்!

Watson's Test Place is in Jeopardy! | டெஸ்ட் இடம்: வாட்சன் திண்டாட்டம்!

வாட்சன்
FILE
ஷேன் வாட்சன் தான் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராகத்தான் களமிறங்குவேன், மேலும் ஒரு பேட்ஸ்மெனாகவே தன்னைக் கருதவேண்டும் என்றெல்லாம் பேசி கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதனால் ஆல் ரவுண்டராக அவர் தன்னை கருதி விளையாடினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடலாம் ஆனால் அதற்கும் ஏகப்பட்ட போட்டி உள்ளது என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

கால் கெண்டை சதை காயம் காரணமாக ஒரு மாத காலம் விளையாடாத ஷேன் வாட்சன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

31 வயதாகும் ஷேன் வாட்சன் பந்து வீசுவதால்தான் காயம் ஏற்படுகிறது எனவே பேட்டிங்தான் தனது கவனம் என்று கூறியிருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் கேப்டன் கிளார்க் அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை என்றே இதுவரை தெரிகிறது.

"ஆஸ்ட்ரேலிய அணிக்குள் அப்படியே சும்மா யாரும் நுழைந்து விட முடியாது. ஆட்டத்திறனே தீர்மானிக்கும், ஷேன் வாட்சன் சில காலங்களாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார். குறிப்பாக ஒருநாள், T20, டெஸ்ட் என்று அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாக விளையாடுகிறார்.

ஆனால் அவர் பந்து வீச்சையும் செய்து ஆல்ரவுண்டராக செயல்பட்டால் போட்டி குறைவு, இல்லை பேட்டிங்தான் என்றால் மற்ற பேட்ஸ்மென்களிடமிருந்து அவருக்கு கடுமையான போட்டி ஏற்படும். வாட்சன் சிறப்பான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்ப அனைத்து உதவிகளும் செய்யப்படும். என்றார் கிளார்க்.

ஆனால் வாட்சனோ, ஒவ்வொரு முறை காயமடைந்து திரும்பும்போதும் ரிதம் கிடைப்பதில்லை. மீண்டும் பார்முக்குத் திரும்ப கஷ்டப்படவேண்டியுள்ளது. நான் பெரிய அளவில் வெற்றி கண்டது தொடர்ச்சியாக நான் ஆஸ்ட்ரேலியாவுக்காக விளையாடியபோதுதான், காயத்தினால் ஏற்படும் இடைவெளி எனது கிரிக்கெட்டை பாதிக்கிறது. எனவேதான் பேட்டிங் மட்டும் இப்போதைக்கு என்றவாறு யோசித்தேன் என்கிறார் வாட்சன்.

ஜெயிக்கப்போவது யாரு? பேட்ஸ்மென் வாட்சனா, ஆல் ரவுண்டர் வாட்சனா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
About Writer
Webdunia