செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (20:01 IST)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய - தென்ஆப்பிரிக்கா மோதல்

aus vs sa
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய - தென்ஆப்பிரிக்கா மோதல்
கடந்த சில நாட்களாக மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 ஓவர்களில்ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல ஆத்ரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனைகள் தீவிரமாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva