ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (20:39 IST)

உலகக் கோப்பை மகளிர் டி-20: இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு!

தென்னாப்பிரிக்க மகளிர் அணி,  இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.


தென்னாப்பிரிக்க அணியில், வோல்வார்ட் 53 ரன்களும், பிரிட்ஸ் 68 ரன்களும், கேப் 27 ரன்களும், டிரையான் 3 ரன்களும் அடித்தனர்.

165 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 5.3 ஓவர்களில் 53 ரன் களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய  போட்டி பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.