1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (10:02 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் தேதி மாற்றமா?

Pakistan
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அக்டோபர் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள லீக் போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அக்டோபர் 15 என்பது நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் போட்டியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும் பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து பிசிசிஐ வேறு தேதியை  தேர்வு செய்ய ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran